இன்று அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்: திருச்சியில் கடைகள் அடைப்பு

6 May 2021, 1:31 pm
Quick Share

திருச்சி: புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்ததையடுத்து திருச்சியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

தமிழக அரசு கொரோனாவில் இரண்டாவது அளவை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளும், இரவு நேர ஊரடங்கு ம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அனைத்து கடைகளையும் இரவு 9 மணிக்குள் மூடிவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி இன்று காலை 6 மணி முதல் பகல் 12 மணிவரை மளிகை, காய்கறி கடைகளுக்கு மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது தவிர மற்ற அனைத்து கடைகளையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவைத் தொடர்ந்து இன்று ஜவுளிக்கடைகள், பாத்திரக்கடைகள், எலக்ட்ரானிக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டது. டீக்கடைகள் பகல் 12 மணிவரை செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் மற்றும் டீக்கடைகளில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை. உணவகங்களில் பார்சல்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் காலை 6 மணி முதல் 10 மணிவரையிலும் பகல் 12 மணி முதல் 3 மணிவரையிலும்,

மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரையிலும் பார்சல்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அழகு நிலையங்கள் செயல்பட ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஊரகப் பகுதிகளில் உள்ள அழகு நிலையங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் மார்க்கெட், இறைச்சிக் கடைகள் செயல்படுவதற்கு அனுமதி இல்லை.அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வாடகை, ஆட்டோக்கள், கார்கள் ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படுகிறது. மருந்தகங்கள் வழக்கம் போல செயல்பட்டு வருகிறது. மேலும் மருந்து வாகனங்கள், உணவுப் பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மற்றும் பால் வாகனங்களுக்கு செயல்பட்டு வருகிறது. ரயில்கள் இயக்கப்பட்டாலும் அங்கு பயணிகள் வருகை மிக குறைவாக காணப்பட்டது. அனைத்து பகுதிகளும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 87

0

1