நீட்டிலிருந்து மாணவர்களை காக்க தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தி மக்கள் அதிகாரம் சாலை மறியல்

13 September 2020, 3:34 pm
Quick Share

திருச்சி: தமிழகத்தில் நீட்டிலிருந்து மாணவர்களை காக்க தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தி மக்கள் அதிகாரம் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

திருச்சியில் மக்கள் அதிகாரம் மண்டல அமைப்பாளர் செழியன் தலைமையில் பொது நல அமைப்புகள் ஆதரவுடன் பிரபாத் தியேட்டர் ரவுண்டானாவில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசின் நீட் தேர்வு என்ற சித்ரவதையால் நேற்று மட்டும் ஒரு மாணவி உட்பட 3 பேர் தற்கொலை செய்துள்ளனர். தொடர்ச்சியாக பலர் நீட் தேர்வு பயத்தால் மடிந்து வருகின்றனர்.


ஆகவே இனியும் காலம் தாழ்த்தாமல் நீட்டை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்தில் நீட்டிலிருந்து மாணவர்களை காக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக அரசை வழியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதன் காரணமாக சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

Views: - 5

0

0