திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

27 February 2021, 4:23 am
Quick Share

திருச்சி: திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ தலைமையில் மாவட்ட அலுவலத்தில் நடைபெற்றது.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ தலைமையில் மாவட்ட அலுவலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மகேஷ் பொய்யாமொழி, மூன்று தொகுதிகளில் நிற்கின்ற வேட்பாளர்கள் அதிக படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். கிராமபுரத்தில் வேட்பாளர் பெயர்களை சுவர் விளம்பரம் செய்ய வேண்டும், கழக தலைவர் சொன்னது போல தமிழ் நாட்டில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில் கழக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

நிற்பது முத்தமிழ் அறிஞர் தான், நிற்பது உதயசூரியன் சின்னம் தான் என்கிற சிந்தனையோடு கழக நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும். கழக தலைவர் அவர்கள் 50ஆண்டுகால பொது வாழ்விற்கு சொந்தக்காரர் அவர் தமிழகத்திற்கு என்ன செய்ய நினைக்கின்றாரோ அதை செய்து முடிக்கின்ற முதல் மாவட்டமாக திருச்சி தெற்கு மாவட்டம் இருக்கும் என்பதை நாம் நிரூபித்திட வேண்டும் .

அதே போல் தேர்தலுக்கு குறைந்த பட்ச நாட்கள் மட்டுமே உள்ளது, எனவே கழக தோழர்கள் கடுமையாக உழைத்திட வேண்டும், உழைப்பது நாமாக இருப்போம், உதிப்பது உதயசூரியனாக இருக்க வேண்டும் என கூறினார் . உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன், வண்ணை அரங்கநாதன், கவிஞர் சல்மா, கோவிந்தராஜ், செந்தில் மற்றும் ஒன்றிய,பகுதி, நகர, பேரூர் கழக செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், ஒன்றிய குழு துணை தலைவர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

Views: - 4

0

0