இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து: இளைஞர் தலை நசுங்கி உயிரிழப்பு

24 November 2020, 6:57 pm
Quick Share

கோவை: கோவையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மீது லாரி எரியதால் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது லாரி ஒன்று மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த இளைஞர் லாரியின் பின்புறம் உள்ள சக்கரம் தலையின் மீது ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலையே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவ அறிந்து வந்த காட்டூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில், இவர் ஊட்டியை சேர்ந்த கார்த்திக் (30 )என்பதும் இவர் கோவையில் பணிபுரிவதாக தெரியவந்துள்ளது.

Views: - 0

0

0