போக்குவரத்து சிக்னல் மீது கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி விபத்து:கடும் போக்குவரத்து பாதிப்பு

Author: kavin kumar
11 August 2021, 3:59 pm
Quick Share

வேலூர்: காட்பாடி குடியாத்தம் சாலையில் போக்குவரத்து சிக்னல் மீது கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதியதில் போக்குவரத்து சிக்னல் கம்பம் விழுந்து கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியானது 24 மணி நேரமும் போக்குவரத்து நிறைந்த ஒரு பகுதியாகும் மேலும் காட்பாடி ரயில்வே மேம்பாலமானது. தமிழகம் ஆந்திரவை இணைக்கும் முக்கிய பாலமாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் காட்பாடி குடியாத்தம் செல்லும் சாலையில் கிளிதான் பட்டறையில் இருந்து காட்பாடி நோக்கி வந்து கொண்டிருந்த லாரி காட்பாடி உழவர் சந்தை எதிரே உள்ள போக்குவரத்து சிக்னல் கம்பத்தின் மீது வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் சிக்னல் கம்பம் சாலையின் குறுக்கே விழுந்தது.

இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக காட்பாடி காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிக்னல் கம்பத்தை அப்புறப்படுத்தும் பணியிலும் போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு கம்பம் அகற்றப்பட்டு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. போக்குவரத்து சிக்னல் கம்பம் விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. மேலும் இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 523

0

0