மன்னார்குடியில் பட்டப்பகலில் பயங்கரம்..! கத்தியால் சரமாரியாக குத்தி டிராக்டர் ஓட்டுநர் படுகொலை..!

By: Udayaraman
7 October 2020, 10:26 pm
Quick Share

திருவாரூர்: மன்னார்குடி அருகே கத்தியால் குத்தி டிராக்டர் ஓட்டுநரை கொலை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உக்காடு தென்பரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மாலா 2 மகன்கள் உள்ளனர் டிராக்டர் ஓட்டுநரான இவர் தனது பணிகளை முடித்துக்கொண்டு மாலை வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டு வாசலில் அதே பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகன் அன்பு தாஸ் மதுபோதையில் கையில் கத்தியுடன் தகாத வார்த்தைகளை பேசிக் கொண்டு இருந்துள்ளார்.

சென்னையில் உணவகத்தில் வேலை பார்த்து வந்த அன்புதாஸ் பொது முடக்கம் காரணமாக தற்போது ஊரில் தங்கியுள்ளார். ரமேஷ் அன்புதாசஸ் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு கையில் இருந்த கத்தியால் அன்புதாஸ் ரமேஷை குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மன்னார்குடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து திருமக்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய அன்பு தேடி வருகின்றனர்.

Views: - 37

0

0