25 டன் நெல் மூட்டைகளுடன் லாரி கடத்தல்..சிசிடிவி காட்சிகள் வெளியீடு…

Author: Udayaraman
5 August 2021, 11:46 pm
Quick Share

சென்னை: கொடுங்கையூரில் 25 டன் நெல் மூட்டைகளுடன் லாரி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகர் 8 வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன்.இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொருக்குப்பேட்டை கூட்செட் பகுதியிலிருந்து 25 டன் நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு எம்.கே.பி நகர் வடக்கு அவன்யூ சாலை பகுதியில் லாரியை ஓரமாக நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் , வந்து பார்க்கும் போது நெல் மூட்டைகளுடன் லாரி காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


இதுகுறித்து கோபால கிருஷ்ணன் எம்.கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த எம்.கே.பி நகர் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து லாரியை நெல் மூட்டையுடன் திருடி சென்ற நபர்களை தேடி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டிவி கேமராக்களில் லாரியை மர்ம நபர் ஒருவர் ஓட்டி செல்வது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் லாரியை திருடிய நபர்களை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

Views: - 160

0

0