மூன்றாம் பாலினத்தவர் மற்றும் நரிக்குறவ இன பெண்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

4 March 2021, 1:23 pm
Quick Share

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2021 சட்டமன்ற தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மூன்றாம் பாலினத்தவர் மற்றும் நரிக்குறவ இன பெண்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலின் போது பொது மக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில் மூன்றாம் பாலினத்தவர் மற்றும் நரிக்குறவ இன பெண்கள் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான சந்திப் நந்தூரி தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

அதன் பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எவ்வாறு வாக்குகளை பதிய வேண்டும் என்பது குறித்து செயல்முறை விளக்கமும் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திப் நந்தூரி விலகினார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த மூன்றாம் பாலினத்தவர் மற்றும் நரிக்குறவர் இன பெண்கள் மாதிரி வாக்குகளை செலுத்தி மகிழ்ந்தனர். அதனைத் தொடர்ந்து, மூன்றாம் பாலினத்தவர் மற்றும் நரிக்குறவர் பெண்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியானது ஈசானிய மைதானத்தில் இருந்து தொடங்கி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள மத்திய பேருந்து நிலையம் அருகே நிறைவு பெற்றது.

Views: - 12

0

0