தேர்தல் பணியில் ஈடுபடும் 24 ஆயிரம் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி: மாவட்ட ஆட்சியர் தகவல்

1 March 2021, 5:06 pm
Quick Share

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 24 ஆயிரம் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு அறையினை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான சந்தீப் நந்தூரி தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. இந்த பாதுகாப்பு அறையிலிருந்து 10 சதவீத மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயிற்சி மற்றும் விழிப்புணர்வுக்காக கொண்டு செல்லப்பட இருக்கின்றது.

அதனைத் தொடர்ந்து, கிராம மற்றும் நகர் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகத்தின் சார்பில் விழிப்புணர்வு வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட அவர் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டதை தொடர்ந்து பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ரோந்து பணிகள் செய்யப்பட்டு வருகிறது

அதனைத் தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சியினர் முன்னிலையில் 10% மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயிற்சி மட்டும் விழிப்புணர்வுக்காக கொண்டு செல்ல சீல் இடப்பட்டிருந்த பாதுகாப்பு அறை இன்று திறக்கப்பட்டது. மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் 24 ஆயிரம் பணியாளர்களின் விவரங்கள் கோவிட் – 19 தடுப்பூசி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு மாவட்ட சுகாதார துறையின் மூலம் அவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும், சென்ற தேர்தலில் குறைந்த அளவு வாக்குகள் பதிவான இடங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் சட்டமன்ற தேர்தல் 2021ல் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

Views: - 3

0

0