வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்

26 February 2021, 3:51 pm
Quick Share

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் 15 கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தின் நோக்கம்வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டம் வழங்க வேண்டும்.

இயற்கை இடர்பாடு காலங்களில் சிறப்பு படி வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பெருமாள், முன்னாள் மாநிலத் தலைவர் ஆரிசன் மற்றும் ஏராளமான பெண்கள் உட்பட 700க்கும் மேற்பட்ட வருவாய் கிராம ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Views: - 3

0

0