வேலூரில் தீபாவளி பட்டாசு விற்பனை இரண்டரை கோடி இலக்கு: மாவட்ட ஆட்சியர் பேட்டி

Author: kavin kumar
25 October 2021, 2:58 pm
Quick Share

வேலூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தீபாவளி பட்டாசு விற்பனை இரண்டரை கோடி என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வேலூரில் கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடியில் தீபாவளியை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தீபாவளி சிறப்பு விற்பனையை துவங்கி வைத்தார். இவ்விழாவில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மற்றும் கூட்டுறவு அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் வேலூர், குடியாத்தம், ஆற்காடு, திருப்பத்தூர், வாணியம்பாடி, காட்பாடி உள்ளிட்ட 7 இடங்களில் தீபாவளி சிறப்பு பட்டாசு விற்பனை நடைபெறுகிறது. இந்த ஆண்டு ரூ.2. 50 கோடி அளவுக்கு பட்டாசு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வெளிச்சந்தையை விட குறைவான விலையில் கூட்டுறவு சங்கங்களின் மூலம் பட்டாசு விற்பனை செய்யபடுவதால் பொதுமக்கள் இதனை பயன்படுத்திகொள்ள வேண்டும். அத்துடன் குழந்தைகளை மகிழ்விக்க மத்தாப்பூ, வானவேடிக்கை, வெடிசரங்கள், புதிய ரகங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சீன பட்டாசுகள் இம்மாவட்டத்தில் விற்பதற்கு வாய்ப்பில்லை, அதனையும் மீறி தடை செய்யப்பட்ட பட்டாசுகள் விற்பனை செய்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும், காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையில் பட்டாசு வெடிக்கலாம் என்று தெரிவித்தார்.

Views: - 611

0

0