கோவையில் இளைஞரை விபச்சாரத்திற்கு அழைத்த இருவர் கைது: 5 இளம்பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார்..!!

Author: Aarthi Sivakumar
17 August 2021, 7:17 pm
Quick Share

கோவை: கோவையில் இளைஞரை விபச்சாரத்திற்கு அழைத்த 2 புரோக்கர்களை கைது செய்த போலீசார் 3 பெண்களை மீட்டுள்ளனர். மற்றொரு சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டு 2 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

விருதுநகரைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தங்கி கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று வடவள்ளியில் உள்ள ஒரு டீக்கடையில் நின்று இருந்தார். அப்போது அங்கிருந்த 2 பேர் அந்த வாலிபரிடம் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு சாதாரணமாக பேசினர்.

அப்போது அவர்கள் தங்களிடம் அழகிகள் இருப்பதாகவும் நீங்கள் விரும்பினால் உல்லாசம் அனுபவிக்கலாம் என்றனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் சரி நான் வருகிறேன் என்று அவர்களுடன் அழகிகள் உள்ள வீட்டிற்கு சென்றார். அந்த வீட்டை அடையாளம் பார்த்துவிட்டு அருகிலுள்ள ஏ.டி.எம் சென்று பணம் எடுத்து வருவதாக கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் வடவள்ளி போலீஸ் நிலையம் சென்று நடந்தவற்றை கூறினார். போலீசார் விபசாரம் நடக்கும் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு 3 அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபசார புரோக்கர்களான மும்பையைச் சேர்ந்த விக்ரம் (வயது 35) மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த மன்டேஷ் விரகன்டப்ப மதர் (26) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அங்கு இருந்த 3 அழகிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இதேபோன்று குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சாதாரண உடையில் சம்பவ இடத்திற்கு சென்று சோதணை நடத்தினர். அப்போது அங்கு இருந்த 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இடையர்பாளையம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபசார புரோக்கர்களான கோவை குனியமுத்தூரை சேர்ந்த ஜப்பர் என்பவரது மனைவி ஜாஷ்மின் (வயது 45) மற்றும் தஷ்லிம் (32) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அங்கிருந்த 2 இளம்பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Views: - 229

0

0