வீட்டில் சாராயம் தயாரித்து விற்க முயன்ற இருவர் கைது

12 June 2021, 3:34 pm
Quick Share

நீலகிரி : பந்தலூர் அருகே கொளப்பள்ளி கிராமத்தில் வீட்டில் சாராயம் தயாரித்து விற்க முயன்ற இருவர் கைது செய்து சேரம்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ள நிலையில், சட்டவிரோதமாக நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த பந்தலூர் தாலுகாவில் உள்ள கொளப்பள்ளி, குறிஞ்சி நகர் பகுதியில் வசித்து வரும் லோகேஸ்வரன் மற்றும் ரவிக்குமார் ஆகிய இருவரும் சேர்ந்து சட்டவிரோதமாக சாராயம் தயாரித்து, அதை அப்பகுதியில் உள்ள குடிமகன்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். இதைதொடர்ந்து அப்பகுதியில் உள்ள பெண்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். தகவலின் அடிப்படையில் சேரம்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாராயத்தை விற்பனை செய்த லோகேஸ்வரன் மற்றும் ராஜ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 15 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து சேரம்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 127

0

0