கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது: 6 கிலோ கஞ்சா பறிமுதல்

13 July 2021, 10:19 pm
Quick Share

சென்னை: புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை புளியந்தோப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்கப்படுவதாக புளியந்தோப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் புளியந்தோப்பு போலீசார் புளியந்தோப்பு , கன்னிகாபுரம் ரயில் தண்டவாளம் அருகே சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த கொளத்தூர் காவேரி நகர் பகுதியைச் சேர்ந்த அப்பு என்கின்ற தீபக், திருவள்ளூர் மாவட்டம் சிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் ஆகிய இருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் இருவரும் கஞ்சா விற்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Views: - 107

0

0