சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்த இருவர் கைது

16 August 2020, 3:46 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே கள்ளத்தனமாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்த மது பாட்டில்களையும் விற்பனை செய்த இருவரையும் கைதுசெய்து மது அமலாக்க பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட மடப்பட்டு கிராமத்தில் சேர்ந்த ஏழுமலை மனைவி பச்சையம்மாள், தங்கவேல் மகன் கண்ணன் ஆகிய இருவரும் சட்ட விரோதமாக வீட்டில் வைத்து திருட்டுத்தனமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாக மாவட்ட எஸ்பிக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் தலைமையிலான போலீசார் வீட்டிற்குள் புகுந்து பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விற்பனை செய்த இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட 500 மது பாட்டில்கள் மற்றும் பச்சையம்மாள், கண்ணன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Views: - 33

0

0