பழங்கால அம்மன் சிலையின் உடைந்த பாகங்களை விற்க முயன்ற இருவர் கைது

2 November 2020, 11:26 pm
Quick Share

கோவை: கோவையில் பழங்கால அம்மன் சிலையின் உடைந்த பகுதியின் ஒரு சில பாகங்களை விற்க முயன்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை தெலுங்கு தெரு அருகே போலீசார் சோதனையில் ஈடுப்பட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டு இருந்த இரண்டு பேர் போலீசார் கண்டதும் அங்கிருந்த புறப்பட்டுள்ளனர். அதைபார்த்த போலீசார் அவர்களை நடத்தையில் சந்தோகமடைந்த இரண்டு பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்கு பின்னாக பதிலளித்துள்ளனர். மேலும் சந்தோகம் அதிகாரித்தல் இரண்டு பேரையும் சோதனை செய்த போது அவர்களிடம் பழங்கால அம்மன் சிலையின் உடைந்த பகுதியின் ஒரு சில பாகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து அவர்களை போலீசார் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், அவர்கள் ஹரி மற்றும் பாலவெங்கடேஷ் என்பதும், பழங்கால அம்மன் சிலையின் உடைந்த பகுதியின் ஒரு சில பாகங்களை விற்க முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட அம்மன் சிலையின் உடைந்த பாகங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 13

0

0