போதைப்பொருட்களை கடத்தி வந்து விற்க முயற்சி செய்த 2 பேர் கைது

By: Udayaraman
8 October 2020, 10:34 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பெங்களூரிலிருந்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்தி வந்து விற்க முயற்சித்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் அருகே திம்மசமுத்திரம் அருகில் ஏராளமான போதைப் பொருட்களை ஒரு சரக்கு வாகனத்திலிருந்து மற்றொரு சரக்கு வாகனத்துக்கு சிலர் மாற்றிக் கொண்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெ.வெற்றிச் செல்வன்,சார்பு ஆய்வாளர் மூர்த்தி உள்ளிட்ட காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் 206 கிலோ எடையுள்ள சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பெங்களூரிலிருந்து எடுத்து வரப்பட்டது தெரிந்தது. இது குறித்து பாலுசெட்டி சத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து திருவேற்காடு அருகே மருதம் கிராமத்தைச் சேர்ந்த வீரமணி, திருவண்ணாமலை மாவட்டம் முள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிவா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்த ரூ.10லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்களையும், அதனை பெங்களூரிலிருந்து கொண்டு வரப்பயன்படுத்திய கார் மற்றும் சரக்கு வாகனம் ஆகியனவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். போதைப்பொருட்களை பெங்களூரிலிருந்து கொண்டு வந்து அதை சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரித்து விற்பனை செய்வதற்காக எடுத்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.பெங்களூரிலிருந்து எடுத்து வந்த சரக்குவாகனத்தின் ஓட்டுநரான ஹரிஷ் என்பவரையும் தேடி வருகின்றனர்.

Views: - 28

0

0