2.5 டன் ரேசன் அரிசியை கடத்த முயன்ற இருவர் கைது

Author: Udhayakumar Raman
29 June 2021, 9:33 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையினர், 2.5 டன் ரேசன் அரிசியை கடத்த முயன்ற, இருவரை கைது செய்தனர்.

தருமபுரி வழியாக, கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளர் ரேவதி தலைமையில் காவல்துறையினர் தருமபுரி அடுத்த குண்டல்பட்டி தேசிய நான்கு வழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக சந்தேகத்துக்கு இடமான முறையில் வந்த ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், தருமபுரி, அதை ஒட்டிய பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட, 2.5 டன் ரேஷன் அரிசியை தருமபுரி அடுத்த சோலைக்கொட்டாயை சேர்ந்த அரவிந்த், அதே பகுதியை சேர்ந்த முனியப்பன், ஆகியோர் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறையினர் அவர்கள், இருவரையும் கைது செய்து, ரேஷன் அரிசி மூட்டைகளுடன் மற்றும் 3 இலட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Views: - 293

0

0