காதலி அனுப்பிய ஆபாச படத்தை மற்றவர்களுக்கு அனுப்பி காதலன்: காதலன் உட்பட இருவர் கைது

Author: Udhayakumar Raman
2 September 2021, 7:52 pm
Arrest_UpdateNews360
Quick Share

திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே காதல் என்கிற பெயரில் மாணவி அனுப்பிய ஆபாச படத்தை காதலனே மற்றவர்களுக்கு அனுப்பி சமூக வலைதளத்தில் பரவி கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள மைக்கேள்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இருதயராஜ் இவரது மகள் ஸ்டெல்லா மேரி- 20. ஸ்டெல்லா மேரி திண்டுக்கல் நெச்சிஓடைப்பட்டி அனுகிரகா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமூகவியல் பணி Bsc (social work) 3-ம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் தனது சக மாணவனான ,ரெண்டலபாறையைச் சேர்ந்த சதீஸ்-20 (த/பெ சுப்பிரமணி) என்ற மாணவரை ஓராண்டாக காதலித்து வந்தாகவும் அப்போது இருவரும் வாட்சப் மூலம் தங்களது ஆபாச படங்களை மாறி மாறி ஒருவருக்கொருவர் வாட்ஸ்அப் மூலமா பறிமாறிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்திலையில் கொரோனோ காரணமாக கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் இருவருக்கும் இடையே சந்திப்பு இல்லாமல் போனதாகவும்,

காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவி ஸ்டெல்லா மேரிக்கு தவறான செல் போன் (WRONG CALL) அழைப்பு மூலமாக தூக்குக்குடியைச் சேர்ந்த அருள் என்பவருடைய மகன் அருண் -25 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் காதலனும் மாணவியின் சக மாணவனமான சதீஸ் , தூத்துக்குடியைச் சேர்ந்த அருண் என்பவனுக்கு , ஏற்கனவே தன்னை காதலித்த போது மாணவி ஸ்டெல்லா மேரி அனுப்பிய ஆபாச படங்களை வாட்ஸ்அப் மூலமாக அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தூத்துகுடியைச் சேர்ந்த அருண் தனது நண்பரான விஷ்வா-24 என்பவனுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் மாணவன் சதீஸ், மாணவி ஸ்டெல்லா மேரியின் ஊரைச் சேர்ந்த நெல்சன்- 21 (த/பெ ஆரோக்கியம்) என்பவனுக்கும் அனுப்பியதாகவும் ,

அந்த மாணவியின் ஆபாச படங்களை நெல்சன் (facebook) சமூக வளைதளத்தில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மாணவி ஸ்டெல்லா மேரி அதிர்ச்சியடைந்து , நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பேபி தலைமையில் நடைபெற்ற விசாரணையின் முடிவில் மாணவியின் காதலன் ரெண்டளப்பாறை சதீஸ்- 20 மாற்றும் சமூக வலைதளத்தில் மாணவியின் ஆபாச படத்தை பதிவேற்றம் செய்த மைக்கேல் பாளையத்தைச்சேர்ந்த நெல்சன் ஆகிய இருவரையும் கைது செய்து நிலக்கோட்டை நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி வேடசந்தூர் சிறையிலடைத்தனர். மேலும் தூத்துக்குடியை சேர்ந்த அருண் மற்றும் விஷ்வா ஆகியோரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

Views: - 183

0

0