எருது விடும் விழாவில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரண்டு காளைகள்: ஒரு காளை மாடு பரிதாப பலி

15 January 2021, 6:48 pm
Quick Share

வேலூர்: அணைக்கட்டு பகுதியில் நேற்று நடைபெற்ற எருது விடும் விழாவில் நேருக்கு நேர் இரண்டு காளைகள் மோதிக்கொண்டதில் ஒரு காளை மாடு பரிதாபமாக உயிரிழந்ததையடுத்து காலை மாட்டிற்கு பேனர் வைத்து உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நேற்று எருது விடும் விழா நடைபெற்றது. இதில் அணைக்கட்டு ஓசூர் கணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளை மாடுகளை அதன் உரிமையாளர்களை அழைத்து வந்து பங்கேற்க வைத்தனர். கணியம்பாடி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்கின்ற விவசாயி 4 லட்ச ரூபாய் கொடுத்து சமீபத்தில் காளை மாடு வாங்கி உள்ளார் .அதற்கு கரிமேடு கருவாயன் என பெயர் வைத்து அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற மாடு விடும் விழாவில் அந்த காளையை பங்கேற்க வைத்தார்.

விருது விழாவில் கரிமேடு கருவாயன் பங்கேற்று ஓடிய போது திடீரென எதிரே ஒரு மாடு வந்ததில் இரண்டு காளை மாடுகளும் நேருக்கு நேர் மோதியது. இதில் கரிமேடு கருவாயன் பலத்த காயமடைந்து பலியானது. அந்தக் காளையின் உரிமையாளர் சுரேஷ் இன்று அந்த காளைக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து மனிதர்களைப்போல மாலை அணிவித்து அதனை நல்லடக்கம் செய்தார். இது அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Views: - 0

0

0