இரு சமூகத்தினர் ஆயுதங்களுடன் மோதல்: 5 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி..

30 November 2020, 8:36 pm
Quick Share

விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே ஒரு சமூகத்தினர் கம்பு இரும்பு உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தாக்கியதில் மற்றொரு சமூகத்தை சேர்ந்த 5 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணபேரி பகுதியில் இரு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். ஒரு சமூகத்தைச் சேர்ந்த 50 குடும்பங்களும் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 15 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் சாலை நடுவே குடிநீர் குழாய் பதித்து தோண்டப்பட்டு அது மூடப்பட்டுள்ள நிலையில் அந்தப் பகுதியில் தான் அனைத்து வாகனங்களும் சென்று வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் ஒரு சமூகத்தினர் சேர்ந்த ஒருவர் இந்த சாலையில் வாகனத்தை ஓட்டி சென்ற போது மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிலர் ஏன் இந்த வழியாக வருகிறாய் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒரு சமூகத்தினர் கம்பு மற்றும் இரும்பு உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு 15 குடும்பங்கள் வசித்து வரும் சமூகத்தை சேர்ந்த நபர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த மோதலில் ஒரு சமூகத்தை சேர்ந்த முத்துபாண்டி, பழனியப்பன், ராஜேஷ்,பேச்சியம்மாள்,பால்செல்வி ஆகிய 5 பேர் காயம் அடைந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதலால் மல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் அப்பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க டிஎஸ்பி நமச்சிவாயம் தலமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Views: - 1

0

0