தனியார் தொழிற்சாலை ஊழியரிடம் ரூபாய் இரண்டு லட்சம் கொள்ளை:சிசிடிவி பதிவு காட்சிகள் அடிப்படையில் விசாரணை

Author: Udayaraman
7 October 2020, 11:12 pm
Quick Share

திருப்பத்தூர்: ஆம்பூரில் தனியார் தொழிற்சாலை ஊழியரிடம் ரூபாய் இரண்டரை லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து சிசிடிவி பதிவு காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திபட்டு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருபவர் சுரேஷ். இவர் நேதாஜி சாலையில் உள்ள ஸ்டேட் வங்கியில் உள்ள கணக்கில் இருந்து ரூபாய் இரண்டரை லட்சம் எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வி.ஏ.கரிம் சாலையில் உள்ள பார்சல் அலுவலகம் முன்பாக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் லாரி பார்சல் சர்வீஸ் காவலாளியிடம் ஒருவர் பேசிக் கொண்டிருந்த போது மற்றொருவர் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு மின்னல்வேகத்தில் தப்பிச் சென்றனர்.

சிறிது நேரத்தில் சுரேஷ் அலுவலகம் விட்டு வெளியில் வந்து பார்த்த போது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணப்பை காணவில்லை என்று பதறினார். இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து சுரேஷ் ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விரைந்து சென்று அங்குள்ள சிசி டிவி பதிவு காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டபகலில் நடந்த இச்சம்பவத்தால் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Views: - 41

0

0