கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற கும்பலைச் சேர்ந்த இரண்டு பேர் கைது

20 April 2021, 8:57 pm
Quick Share

திண்டுக்கல்: கொடைரோடு அருகே தேசிய நெடுஞ் சாலையோர சிறு வியாபாரிகளிடம் கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற கும்பலைச் சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்-மதுரை தேசிய நான்குவழிச்சாலை கொடைரோடு சுங்கச்சாவடி அருகே காமலாபுரம் பிரிவு என்ற இடத்தில் சாலையோரம் உள்ள பழக்கடையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்கள் பழங்கள் வாங்கியபோது 500 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்ததாகவும், அப்போது அது கள்ளநோட்டு என தெரிந்து கடைக்காரர் அதை வாங்க மறுத்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, அவ்வழியாக வந்த ரோந்து காவலர்கள் இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில், 500 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்ற இருவரும் பழனியைச் சேர்ந்த நாகரத்தினம் (43) மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த தனலட்சுமி (42)எனவும் தெரியவந்தது.

மேலும் அவர்களிடமிருந்து 30×500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் மற்றும் மூன்று 100- ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்து அவர்கள் வந்த இருசக்கர வாகனத்துடன் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து விசாரணை செய்த அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர் சொர்ணலெட்சுமி தீவிர விசாரனை செய்து வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து நிலக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் சில்லரை வியாபாரிகள் நிறைந்த தேசிய நெடுஞ்சாலை சாலையோர கடைகள் சுங்கச்சாவடி பகுதி சில்லரை வியாபாரிகள் மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் கொடைரோடுரயில் நிலையம் பூக்கள் மற்றும் பழங்கள் அதிகம் ஏற்றுமதி செய்யும் பகுதியாக உள்ள கொடைரோடு பகுதியில் இதுபோன்ற கள்ள ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடும் கும்பல் ஊடுருவியிருப்பதாக வந்த தகவலையடுத்து மாவட்ட நிர்வாகம் சிறப்பு தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Views: - 29

0

0