ஏ.டி.எம்மில் பணம் எடுத்து வந்த இளைஞரை அரிவாளால் வெட்டி பணத்தை பறிமுதல் செய்த 2 பேர் கைது

19 October 2020, 4:23 pm
Quick Share

சென்னை: சென்னை அருகே ஏ.டி.எம்மில் பணம் எடுத்து வந்த இளைஞரை அரிவாளால் வெட்டி பணத்தை பறிமுதல் செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை எம்.கே.பி நகரில் உள்ள கோட்டக் மகநே்திரா ஏ.டி.எம் இயந்திரம் உள்ளது. இதில் முகமது ஷேக் ஜாவுத் என்ற இளைஞர் பணம் எடுக்க சென்றுள்ளார். இவர் அடையாரில் உள்ள தனியார் ரெஷ்டாரண்ட்டில் பணியாற்றி வருகிறார். முகமது ஷேக் ஜாவுத் பணம் எடுக்க உள்ளே செல்லும் போதும் , பணம் எடுத்து விட்டு வெளியே வரும் போது முகமது முஸ்தபா , கோகுல கிருஷ்ணன் , ஸ்பீடு அஜித் ஆகிய 3 பேரும் தொடர்ந்து கண்காணித்துள்ளனர்.
ஏ.டி.எம் மில் இருந்து வெளியே வந்த போது ஸ்பீட் அஜித் என்ற இளைஞர் , முகமது ஷேக் ஜாவுத் தை தான் வைத்திருந்த கத்தியை வைத்து கையை வெட்டினர்.

வெட்டி விட்டு பணம் , வாட்ச் , செல்போன் ஆகியவற்றை பறித்து இரு சக்கர வாகனத்தில் சென்று விட்டனர். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நபர் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வியாசர்பாடி , எம்.கே.பி நகர் , முல்லை நகர் , ஓட்டேரி பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முல்லை நகர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த 2 பேரை மடக்கி பிடித்த போலீசார் விசாரணை செய்ததில், முகமது முஸ்தபா , கோகுல கிருஷ்ணன் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இதில் ஸ்பீடு அஜித் தலைமறைவாக உள்ளான். இவனை போலீசார் தேடி வருகின்றனர்.

Views: - 48

0

0