கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது

23 January 2021, 10:05 pm
Quick Share

திருவள்ளூர்: சென்னை புறநகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பெண்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 8 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் விச்சூர் பகுதியை சேர்ந்த மகாலட்சுமி, ஜெயா இருவரும் சென்னை புறநகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக வண்ணாரப்பேட்டை மதுவிலக்கு தனிப்படை போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து அவர்களிடம் சோதனை மேற்கொண்டதில், 8 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த இருவரையும், மணலிபுதுநகர் காவல் நிலைய போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்திவந்து எண்ணூர், தண்டையார்பேட்டை, மணலிபுதுநகர் பகுதிகளில் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Views: - 0

0

0