பிரிந்து போன மனைவியை நினைத்து மண்ணெண்ணெய் ஊற்றி டைலர் தற்கொலை

21 September 2020, 10:38 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பிரிந்துபோன மனைவியை நினைத்து மது போதைக்கு அடிமையாகி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு டைலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சிபுரம் அருணாச்சல நகர் பகுதியில் வசிக்கும் முருகன் என்பவர் டைலர் கடையை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னதாக உறவினர் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவருக்கு 10 வயதில் மகனும் 8 வயதில் மகளும் உள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி பிரிந்து பாண்டிச்சேரியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். மன உளைச்சலுக்கு ஆளான முருகன் தினந்தோறும் அதிக அளவில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முருகன் சமையல் அறையில் வைத்து இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்து வருவதற்குள் சம்பவ இடத்திலேயே முருகன் பலியானார். இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சனைக்காக தீக்குளித்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 5

0

0