தங்கம் தென்னரசுவின் தாயார் மரணம்: உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி

By: Udayaraman
5 October 2020, 4:14 pm
Quick Share

விருதுநகர்: முன்னாள் திமுக அமைச்சரும், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசுவின் தாயாரின் உடலுக்கு திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் திமுக அமைச்சர் தங்கபாண்டியனின்  மனைவியும், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான  தங்கம் தென்னரசு மற்றும் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனின் தாயாருமான ராஜாமணி தங்கபாண்டியன் நேற்று இரவு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதை அடுத்து அம்மையாரின் நல்லடக்கம் இன்று மல்லாங்கிணரில் தங்கம் தென்னரசு தோட்டத்தில் அவருடைய தந்தை தங்கபாண்டியனின் நினைவு இடம் அருகே நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இதை அடுத்து தங்கம் தென்னரசு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது தாயார் ராஜாமணி அம்மாளின் உடலுக்கு அஞ்சலி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்திய பின்பு தங்கம் தென்னதரசுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது பேசுகையில், “ கலைஞரின் நெருக்கிய நண்பரின் மனைவி தங்கள் குடும்பத்தில் ஒருவருமான அம்மையாரின் இறப்பு வருத்தமளிப்பாதகவும், அவரின் குடும்பத்திற்கு திமுக சார்பாக இரங்கல் தெரிவித்தார்.

Views: - 50

0

0