செயற்கை கடற்கரை மணற்பரப்பு உருவாக்கும் பணிகள் குறித்து மத்திய அமைச்சர் ஆய்வு

Author: Udhayakumar Raman
18 October 2021, 4:33 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் செயற்கை கடற்கரை மணற்பரப்பு உருவாக்கும் பணிகள் குறித்து மத்திய அமைச்சர் ஜிந்திர சிங் காணொளி வாயிலாக திட்டப்பணிகளை கேட்டறிந்தார்

நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி மத்திய அமைச்சகத்தின் அனைத்து துறைகள் சார்பில் துறை சார்ந்த சதனைகள் குறித்து விளக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் புதுச்சேரியின் புராதான கடற்கரையை சீரமைப்பு பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் புதுச்சேரியின் புராதான கடற்கரையில் செயற்கை மணல் பரப்பை உறுவாக்க செயல்படுத்தப்படும் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் அமைச்சர் ஜிந்திர சிங் காணொளி வாயிலாக இந்த பணிகள் குறித்து கடற்கரையை ஆய்வு செய்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

புவி அறிவியல் அமைச்சகத்தின் சார்பில் புதுச்சேரி கடற்கரையில் செயல்படுப்பட்டு வரும் சீரமைப்பு பணிகள் குறித்து விளக்கிய அதிகாரிகள். கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரியின் கடல் உள்வாக்கியதாக வந்த தகவல் முற்றிலும் தவறு என்றும், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியில் இருந்த கடற்கரை மணற்பரப்பை மீண்டும் உருவாக்குவதற்கான பணி நடைபெற்றதாகவும், மேலும் புதுச்சேரி துறைமுகத்துறை சார்பில் நடைபெற்று வரும் துறைமுகம் ஆழப்படுத்தும் பணியால் இதுவரை 2 லட்சம் கியுபிக் மீட்டர் மணல் தூர்வாரப்பட்டு அதை இந்த கடற்கரையில் நிரப்பியதால் இது போன்ற அழகிய கடற்கரை நமக்கு உருவாகியுள்ளதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

Views: - 171

0

0