திருப்பத்தூர் ரயில்வே நிலையம் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

16 November 2020, 4:57 pm
Quick Share

திருப்பத்தூர்: திருப்பத்தூர் ரயில்வே நிலையம் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டட சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட திருப்பத்தூர் ரயில் நிலையம் பகுதியிலுள்ள சாம நகர் பகுதியில் சென்னை டூ சேலம் ரயில்வே தண்டவாளத்தில் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பதாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 22

0

0