திறக்கப்படாத அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்: மழையில் நனையும் நெல் மூட்டைகள்…

Author: Udhayakumar Raman
23 September 2021, 6:54 pm
Quick Share

திருவாரூர்: மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கியுள்ளது.

திருவாரூர்மாவட்டம் முழுவதும் தற்போது குறுவை நெல் அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. கடந்த சில தினங்களாக பெய்த மழையால் சில இடங்களில் வயலில் மழை நீர் தேங்கி பயிர்கள் சாய்ந்து மூழ்கி உள்ளது. இருந்த போதும் மன்னார்குடி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் தற்போது அறுவடை பணிகள் தொடங்கி கொள்முதல் நிலையங்களுக்கு நெல் எடுத்து வரப்படுகிறது. ஆனால் திருவாருர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று வரை திறக்காமல் உள்ளது.

இதனால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மன்னார்குடி அருகே கூப்பாட்சி கோட்டை,கண்டிதம் பேட்டை,மேலநெம்மே லி பெருகாவாழ்ந்தான், பாளையங்கோட்டை, திருமக்கோட்டை, வல்லூர் உள்ளிட்ட பல கிராமங்களிலும் சுமார் 30 ஆயிரம் நெல் முட்டைகள் வரை தேக்கமடைந்து உள்ளது. நெல் மணிகள் திறந்த வெளிகளில் கொட்டி வைக்கப்பட்டுளளதால் திடீரென பெய்யும் மழையில் நனைந்து நெல்லின் ஈரப்பதம் அதிகமாகுமே என கவலையில் உள்ளனர் விவசாயிகள். எனவே தற்காலிகமாக வும் நிரந்தரமாக வும் அமைக்கப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் பணிகளை தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 126

0

0