செண்டுமல்லி பயிரிட்டு அசத்திய விவசாயிகள்

23 November 2020, 6:41 pm
Quick Share

ஈரோடு: சத்தியமங்கலம் பகுதியில் வாழையில் ஊடுபயிராக செண்டுமல்லி பயிரிட்டு விவசாயிகள் அசத்தியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் வாழை பயிரிடுவது வழக்கம். 12 மாத கால பயிரான வாழைகளுக்கிடையே தற்போது ஊடுபயிராக செண்டுமல்லி பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 5 அடிக்கு 5 அடி இடைவெளி விட்டு வாழைக் கன்றுகள் நடவு செய்யப்படுகிறது. வாழை கன்று நடவு செய்தவுடன் இடையில் உள்ள வெற்றிடங்களில் செண்டுமல்லி நாற்றுக்களை விவசாயிகள் நடவு செய்கின்றனர்.

செண்டுமல்லி மூன்று மாத கால பயிர் என்பதால் மூன்றாவது மாதத்தில் பூக்களை அறுவடை செய்து விடலாம். தொடர்ந்து மீண்டும் செண்டு மல்லி நடவு மேற்கொள்ளலாம். வாழையில் ஊடுபயிராக செண்டுமல்லி பயிரிடுவதன் மூலம் களைச் செடிகள் வளர்வது தடுக்கப்படுவதோடு வாழைகள் நன்கு செழித்து வளர்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் செண்டு மல்லி விற்பனையில் கிடைக்கும் வருமானத்தை பயன்படுத்தி வாழைக்கு உரமிடுதல், களை வெட்டுதல், மருந்து தெளித்தல் செலவுகளை ஈடுகட்ட முடிவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

Views: - 0

0

0