சென்னையில் வடியாத மழை நீர்: படகில் பயணிக்கும் பொது மக்கள்…

Author: Udhayakumar Raman
30 November 2021, 5:08 pm
Quick Share

சென்னை: சென்னையில் வடியாத மழை நீரால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.மேலும் வேலைக்கு செல்வோர் படகுகள் மூலமே சென்று வருகிறார்கள்.

சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. பல்வேறு இடங்களில் தண்ணீர் அதிகமாக தேங்கியுள்ளதால் இயல்பாக வெளியே செல்ல முடியாத நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. அதே போல் சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சிவ இளங்கோ சாலையில் உள்ள பெரவல்லூர் காவல் நிலையம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீர் இடுப்பளவு உள்ளதால் அங்குள்ள மக்கள் படகு மூலமாக பயணித்து வருகின்றனர்.இங்கு மழை நீர் தேங்குவதற்கு முக்கிய காரணமாக கூறப் படுவது வன்னாங்குட்டை என்ற குட்டை இப்போது இல்லாதது. பொதுவாக கன மழை பெய்யும் போதெல்லாம் இங்குள்ள மழை நீர் வடிந்து இந்த குட்டையில் சென்று விடும் . சாலைகளில் நீர் தேங்காது. அந்த வண்ணங்குட்டை இப்போது ரபிஸ் போட்டு முடப்பட்டுள்ளதால் இங்கு நீர் தேங்கி நிர்ப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இங்கு குளம் போல் தேங்கி நிற்கும் நீரை ராட்சச மோட்டார் மூலம் அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் இரவு பகலாக முயன்று வந்தாலும் அவ்வப்போது பெய்யும் மழையால் மழை நீர் வடிந்த பாடில்லை.

Views: - 64

0

0