ஆதரவற்ற வயதான மூதாட்டியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த காவல் துறையினர்…

31 August 2020, 11:13 pm
Quick Share

சென்னை: வியாசர்பாடி அருகே ஆதரவற்ற மூதாட்டியை போலீசார் மீட்டு அவருக்கு தேவையான உதவிகளை செய்து காப்பகத்தில் ஒப்படைத்த சம்பவம் செம்பியம் சுற்றுப்புற வட்டாரத்தில் நெழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை வியாசர்பாடி சத்தியவாணி முத்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி ( 60 ) இவரது கணவர் அன்பு லிங்கம் கடந்த 2 மாதத்திற்கு முன்பு உடல் நலகுறைவால் இறந்து விட்டார். இந்நிலையில் வீட்டில் தனியாக புவனேஸ்வரி வசித்து வந்துள்ளார் கடந்த 3 நாட்களாகவே புவனேஸ்வரி சரியாக சாப்பிடவில்லை என வீட்டின் உரிமையாளர் சங்கர் செம்பியம்  உதவி கமிஷனரிடம் முறையிட்டு அவர்களுக்கு யாரும் கிடையாது எனது வீட்டில் தனியாக இருந்து வருகிறார் என நடந்தவற்றை கூறியுள்ளார்.

மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பராமரிக்க யாரும் இல்லை என நினைத்து புவனேஸ்வரி அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை  சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் அப்போது போலீசார் அவரை காப்பாற்றியுள்ளனர் தொடர்ந்து அவரை பற்றி  விசாரித்த போலீசார் , மூதாட்டியின் வீட்டிற்குச் சென்று அவருக்கு முதலில் கொரோனா  பரிசோதனை செய்தனர் இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது அதன் பின்பு அவரிடம் பொறுமையாக பேசி மனநிலையை சரிபடுத்தினர்.

அதன் பின்பு பெரவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் காப்பகத்தில் தங்கி கொள்ள சம்மதமா என கேட்டனர் அதற்கு புவனேஸ்வரியும் சம்மதம் என தெரிவித்தார். உடனடியாக போலீசார் வீட்டைக் காலி செய்து காப்பகத்தில் ஒப்படைத்தனர் அவரது வீட்டில் இருந்த 10.215 ரூபாய் பணம் மற்றும் பொருட்கள் அனைத்தையும் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.  ஆதரவற்ற மூதாட்டியை போலீசார் மீட்டு அவருக்கு தேவையான உதவிகளை செய்து காப்பகத்தில் ஒப்படைத்த சம்பவம் செம்பியம் சுற்றுப்புற வட்டாரத்தில் நெழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0