புதுச்சேரியில் வார்டுகளை திருத்தி அமைத்து உள்ளாட்சி தேர்தலை நடத்த அனைத்து கட்சி எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தல்

Author: kavin kumar
9 October 2021, 5:49 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் பட்டியல் இனத்தவருக்கு வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்படாததால் வார்டுகளை திருத்தி அமைத்து உள்ளாட்சி தேர்தலை நடத்த சபாநாயகர் தலைமையில் ஆளுநரை சந்தித்து அனைத்து கட்சி எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தலை நடத்த கடந்த மாதம் 22ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது. இதனிடையே வார்டு ஒதுக்கீட்டில் குளறுபடிகள் நடத்துள்ளதாக கூறி சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குளறுபடிகளை சரிசெய்து புதிய அட்டவணை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து வரும் நவம்பர் 2ம் தேதி முதல் மூன்று கட்டமாக தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் நேற்று இரவு வெளியீட்டது. இந்த நிலையில் திருத்தப்பட்ட புதிய அட்டவணையில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவருக்கு வார்டு ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்ற ஒரு புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துகளை கேட்பதற்காக சட்டபேரவை தலைவர் செல்வம் தலைமையில் சட்டபேரவையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள், என்.ஆர்காங்கிரஸ், பாஜக, திமுக, காங்கிரஸ், மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைப்படி உள்ளாட்சி தேர்தல் குறித்து அட்டவணை வெளியிடுவதற்கு முன்பாக அனைத்து கட்சியினருடைய கருத்துகளை கேட்ட வேண்டியது மரபு ஆனால் எவ்வித கருத்துகளையும் கேட்கமால் அவசர கோணத்தில் சுழற்சி முறையில் அல்லாமலும், மக்கள் தொகை அடிப்படைநில் இல்லாமலும், மேலும் பட்டியல் இனத்தவருக்கு முற்றிலுமாக இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை எனவே இந்த தேர்தல் அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளனர். இந்த கூட்டத்தில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி வரையறைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். பிற்றபடுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீட்டை புறக்கணித்து மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்து இருப்பது சட்ட விரோதம், சமூக நீதிக்கு எதிரான மாநில தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

மழைக்காலம், புதுச்சேரி விடுதலை நாள், கல்லறைத் திருநாள், தீபாவளி திருநாள் போன்ற திருவிழாக் காலங்களின் இடையில் தேர்தல் நடத்துவது நடைமுறைக்கு விரோதமானது. உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலை அனைவரும் புறக்கணிக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளதால், இதில் உள்ள குளறுபடிகளை நீக்கி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் சபாநாயகர் செல்வம் தலைமையில் ஆளுநர் மாளிகைக்கு சென்று துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தராஜனை சந்தித்து அனைத்து கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மனுவாக வழங்கினர். மேலும் தன்னிச்கையாகவும் சட்ட விதிகளுக்கு விரோதமாகவும் முடிவுகளை எடுக்கும் மாநிலத் தேர்தல் ஆணையர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆளுநரிடம் புகார் அளித்தனர்.

Views: - 192

0

0