பெற்றோர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் குழந்தைகளுக்கு தொற்று பரவுவதை தடுக்கலாம்: சுகாதாரத்துறை இயக்குனர் பேட்டி

15 July 2021, 11:58 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை கண்டு பொதுமக்கள் யாரும் அச்சம் அடைய வேண்டாம் என்றும் பெற்றோர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டால் குழந்தைகளுக்கு தொற்று பரவுவதை தடுக்கலாம் என சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், புதுச்சேரியில் இதுவரை 21 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததால் அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது அதில் 1 வயது முதல் 5 வயது உள்ள 12 குழந்தைகளுக்கும், 5 வயதிற்கு மேல் உள்ள 4 குழந்தைகள் என 16 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மீதம் உள்ள 5 பிறந்த குழந்தைகளின் தாய்க்கு கொரோனா தொற்று உள்ளதால் இந்த குழந்தைகளுகான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், குழந்தைகள் யாரும் தீவிர சிகிச்சை பிரிவில் இல்லை எனவே குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருப்பதை கண்டு மூன்றாவது அலை வந்துவிட்டது என்று மக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும்,

குழந்தைகளுக்கு தொற்று பரவாமல் இருக்க பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொல்ல வேண்டும் என தெரிவித்தார், தொடர்ந்து பேசிய அவர், குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டால் எண்ணென்ன அறிகுறிகள் என்பதை குறித்து செவிலியர், ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் தொற்று பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளிலும் குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்ப்பட்ட்டால் தேவையான படுக்கைகள், வென்டிலேட்டர்கள் ஆகியவை தயாராக நிலையில் உள்ளதாக தெரிவித்தார். மேலும் புதுச்சேரியில் இதுவரை 5 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

Views: - 216

0

0