தொடர் மழையால் வேகமாக நிறைந்து வரும் வாளையாறு அணை: தமிழக – கேரள விவசாயிகள் மகிழ்ச்சி…

9 August 2020, 8:46 pm
Quick Share

கோவை: மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் தொடர் மழையால் தமிழக கேரள எல்லையில் உள்ள வாளையாறு அணை நிரம்பி வருவதால் இரு எல்லை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழக – கேரள எல்லையான வாளையாறில், வாளையாறு அணை அமைந்துள்ளது. அணையின் மொத்தம் கொள்ளளவு 64 அடி, இந்த அணையில் சேகரிக்கப்படும் நீர் கேரள பாசனத்திற்கு செல்கிறது. நீர் தேக்கப்பகுதி தமிழக எல்லையில் அமைந்துள்ளதால் வாளையாறு அருகே உள்ள மாவூத்தம்பதி, நவக்கரை, உள்ளிட்ட பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து காணப்படும்.

வறட்சியால் வாளையாறு அணையில் நீர் வற்றி மிக குறைவான நீர் இருந்த நிலையில், கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழையாலும், எட்டிமடை, க.க.சாவடி பகுதியில் பெய்த மழையால் வழிந்த நீரால் கடந்த மூன்று நாட்களில் அணை நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இன்னும் இரண்டு தினங்களின் அணையின் மொத்த கொள்ளளவான 64 அடியும் நிறையும் தருவாயில் அணை உள்ளது. அணையில் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் தமிழக கேரள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Views: - 9

0

0