சைக்கிள் மீது வேன் மோதி விபத்து: பள்ளி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

13 April 2021, 2:30 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி சைக்கிளில் சென்ற போது வேன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் நேரு நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் ஷாலினி 16 அங்குள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் டியூஷன் சென்டருக்கு தனது சைக்கிளில் திருவள்ளூர் செங்குன்றம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த வேன் மோதி விபத்துக்குள்ளானதில் மாணவி ஷாலினி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த செங்குன்றம் போலீசார் மாணவியின் உடலை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மாதவரம் போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு
தப்பியோடிய வேன் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Views: - 16

0

0