பாஜகவில் இணைந்த பல்வேறு கட்சியினர்… வரவேற்பு கொடுத்த மாவட்ட தலைவர்…

6 September 2020, 4:21 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகரில் பல்வேறு கட்சியை சேர்ந்த 200க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் பிரிந்து வந்து தங்களை பாஜகவில் இணைந்து கொண்டனர். அவர்களுக்கு கிழக்கு மாவட்ட தலைவர் கஜேந்திரன் அடிப்படை உறுப்பினர் அட்டை வழங்கினார்.

விருதுநகர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட தலைவர் சீதாராமன் பொதுச்செயலாளர் பொன் ராஜ் மற்றும் இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனார். இந்த நிகழ்ச்சியின் போது விருதுநகரை சேர்ந்த பல்வேறு கட்சியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பிற கட்சியில் இருந்து பிரிந்து தங்களை மாவட்ட பாஜகவில் இணைத்துக் கொண்டனர். கட்சியில் புதியதாக இணைந்த இளைஞர்களுக்கு வி௫துநகர் கிழக்கு மாவட்ட தலைவர் கஜேந்திரன் உறுப்பினர் அட்டையை வழங்கினார். மேலும் மாவட்ட செயலாளர் அழகர்சாமி , வடக்கு ஒன்றிய தலைவர் பார்த்தசாரதி, இளைஞரணி மாவட்ட துணைத்தலைவர் நித்யா பூலோகராஜ், மாவட்ட பொருளாளர் சிவகுமார், ஒன்றிய இளைஞரணி தலைவர் கேசவன், நகர தலைவர் பிரவீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Views: - 6

0

0