திண்டுக்கல்லில் வாகனங்கள் சோதனை: நேரடியாக களத்தில் இறங்கி அதிரடி சோதனைகளில் ஈடுபட்ட மாவட்ட எஸ்பி…

Author: Udhayakumar Raman
28 September 2021, 1:27 pm
Quick Share

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இருசக்கர நான்கு சக்கர மற்றும் பேருந்துகளில் மாவட்ட எஸ்பி சீனிவாசன் சோதனை செய்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த வாரத்தில் நடந்த தொடர் கொலைகள் மற்றும் வழிப்பறி சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள் உள்ளிட்ட 339 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீசார் ஆங்காங்கே சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே இன்று திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையிலுள்ள பேகம்பூர் பகுதியில் களம் இறங்கிய மாவட்ட எஸ்பி சீனிவாசன், அவ்வழியாக வந்த இருசக்கர நான்கு சக்கர மற்றும் பேருந்துகளில் சோதனை செய்தார். மேலும் கடைகளில் முக கவசம் அணியாமல் கும்பல் கும்பலாக நின்றிருந்த பொதுமக்களை முகக்கவசம் அணிய வலியுறுத்தினார். இந்த சோதனை நடவடிக்கைகள் தினந்தோரும் தொடர்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் காரணமாக சமூக விரோத செயல்களும் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 93

0

0