இரு சக்கர வாகனம் வாங்க வருவது போல் நடித்து வாகனம் திருட்டு: சிசிடிவி காட்சியால் சிக்கிய குற்றவாளி

11 September 2020, 3:50 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகரில் புதிய இரு சக்கர வாகனம் வாங்க வருவது போல் நடித்து பழுது நீக்கம் செய்ய வந்த இரு சக்கர வாகனத்தை திருடி சென்ற நபரை பஜார் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனனர்.

விருதுநகர் ஆர்.சி சர்ச் தெருவை சேர்ந்தவர் மதன்பிரகாஷ் (42) இவர் விருதுநகர் நகராட்சி அலுவலகம் அருகே புதிய இரு சக்கர வாகனம் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை 35 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவர் புதிய இருசக்கரம் வாங்க வேண்டும் எனக் கூறி வந்தாக கூறப்படுகிறது. அவரை சிறிது நேரம் ஷோரும் ஊழியர்கள் காத்திருக்கும் படி கூறி உள்ளர்கள். சிறிது நேரத்திற்க்கு பின்பு அந்த மர்ம நபரும் பழுது நீக்குவதற்க்கு வந்த வாகனமும் மாயம் ஆனது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது புதிய இரு சக்கர வாகனம் வாங்க வந்த நபர் அலுவலகத்தில் இருந்த வாகனத்தை திருடி சென்றது தெரிய வந்தததை அடுத்து, மதன்பிரகாஷ் விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சிசிடிவி பதிவுகளை கொண்டு விசாரணை நடந்திய பஜார் காவல்துறையினர் காணாமல் போன இரு சக்கர வாகனத்தை திருடிய கோயம்புத்தூர் மாவட்டம் ஆண்டிபாளையத்தை சேர்ந்த பொன் இசக்கி (35) என்பவரை கைது விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 0

0

0