காவல் நிலையங்கள் மூலம் கைப்பற்றபட்ட வாகனங்கள் செப்-6 பொது ஏலம்

Author: kavin kumar
29 August 2021, 8:51 pm
Quick Share

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் காவல் நிலையங்கள் மூலம் கைப்பற்றபட்ட வாகனங்கள் செப்-6 பொது ஏலம் விடப்படும் என மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா அறிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் காவல் துறையினரால் கைப்பற்றபட்ட பல்வேறு வாகனங்கள் உரிமை கோரபடாமல் உள்ளது. இந்நிலையில் அந்த வாகனங்களை பொது ஏலம் விட மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி நிர்ணயகுழு ஒன்றை உருவாக்கி உள்ளார். அதன்படி மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் அமைக்கபட்ட குழுவினர் மூலம் காவல்துறையினரால் கைப்பற்றபட்ட 136 வாகனங்களும் வருகிற செப்டம்பர் மாதம் 06 ஆம் தேதி காலை 10 மணிக்கு பொது ஏலம் விடப்படும் என மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் அந்த தொகை அரசு ஆதாயம் ஆக்கபடும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

Views: - 171

0

0