இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதி விபத்து: தனியார் மருத்துவமனையின் ஊழியர் சம்பவ இடத்தில் பலி

By: Udayaraman
12 October 2020, 9:44 pm
Quick Share

வேலூர்: காட்பாடி ரயில்வே மேம்பாலம் அருகில் இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதிய விபத்தில் தனியார் மருத்துவமனையின் ஊழியர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி வண்டரந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ரகு. இவர் அரியூரில் உள்ள நாராயணி மருத்துவமனையின் ஆராய்ச்சி மையத்தில் ஊழியராக பணியாற்றுகிறார். இன்று வண்டரந்தாங்கலில் இருந்து இருசக்கர வாகனத்தில் பணிக்கு செல்ல வந்து கொண்டிருந்தார். அப்போது காட்பாடி ரயில்வே மேம்பாலம் அருகில் காட்பாடியிலிருந்து வேலூர் நோக்கி வந்த வேன் அவரின் இருசக்கர வாகனத்தின் பின் பக்கத்தில் மோதியது. இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட ரகு சாலையில் தலையை மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். தலையில் ஹெல்மெட் அணிந்து இருந்த போதும் ஹெல்மட் நசுங்கி தலையில் காயம் ஏற்பட்டுள்ளது

இதுகுறித்து காட்பாடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து உடலைக்கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காட்பாடி ரயில்வே மேம்பாலம் அருகில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. தரமான தலைக்கவசங்கள் அணியாமல் தரமற்ற தலைக்கவசங்கள் அணிவதால் இதுபோன்ற உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்பட்ட வண்ணமே உள்ளது.

Views: - 31

0

0