இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் தந்தை மகள் உள்பட 3 பேர் பலி…

1 August 2020, 9:37 pm
Quick Share

வேலூர்: பேரணாம்பட்டு அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் தந்தை மகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த சாத்கர் பகுதியை சேர்ந்த கார்த்திக் மற்றும் அவருடைய இரண்டு மகள்களும் சந்தியா, தேவயானி ஒரே இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரெதிரே இரு வாகனத்தில் வந்த சிந்தகணவாய் பகுதியைச் சேர்ந்த நித்தின்குமார் (வயது15), தீபக் (வயது 8) இரு சக்கர வாகனங்களும் செர்லப்பல்லி என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர்.

இந்த விபத்தில் தந்தை கார்த்திக் மற்றும் அவருடைய இளைய மகள் தேவயானி மற்றும் நித்தின்குமார் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பலத்த காயமடைந்த சந்தியா மற்றும் தீபக் இருவரும் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை-மகள் விபத்தில் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஊரடங்கு காலத்தில் சாலையில் எந்த வாகனங்களும் செல்லாததால் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.மேலும் இது குறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 6

0

0