பாமகவினர் சாலைமறியல்: இரு மாநில போக்குவரத்து பாதிப்பு

1 December 2020, 2:04 pm
Quick Share

வேலூர்: சென்னையில் நடைபெறும் இட ஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்க சென்ற பாமகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால், அவர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதல் இரு மாநில போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

வேலூர் குடியாத்தம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள பாமகவினர் சென்னையில் நடைபெறும் இட ஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்க சுமார் 200க்கும் மேற்ப்பட்ட, 10க்கும் மேற்ப்பட்ட வாகனங்கள் மூலம் புறப்பட்டனர். அப்போது போராட்டத்தில் கலந்துக்கொள்ள அனுமதி இல்லை என கூறி அவர்களை காவல்துறையினர் தடுத்தனர்.

இதனால் அவர்கள் அனைவரும் குடியாத்தம் காட்பாடி கூட்ரோடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிச்சல் ஏற்பட்டு சுமார் 500 க்கும் மேற்ப்பட்ட வாகனங்கள் அணிவகுத்து காத்திருந்தன. இந்த சூழ்நிலையால் தமிழக, ஆந்திர இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.

Views: - 11

0

0