18 வாக்குச்சாவடி மையங்களில் வீடியோ கேமராக்கள் மூலம் ஒளிப்பதிவு : மாவட்ட தேர்தல் அலுவலர் கதிரவன் தகவல்

27 February 2021, 5:04 pm
Quick Share

ஈரோடு: இணையவசதி இல்லாத மலைகிராமத்தில் உள்ள 18 வாக்குச்சாவடி மையங்களில் வீடியோ கேமராக்கள் மூலம் ஒளிப்பதிவு செய்யப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் கதிரவன் தெரிவித்தார்

ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும் , ஆட்சியருமான கதிரவன், ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரமுகர்களுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் கதிரவன் , நேற்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் , அனைத்து அரசு அலுவலர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தேர்தல் நடத்தை விதி மீறல்களை கண்காணிக்க இன்று முதல் பறக்கும் படை செயல்படும் என்றும் , தேர்தல் தொடர்பான புகார்களை 1077 நெம்பரில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றார். கிராமப்புற பகுதிகளில் அனுமதி பெற்று சுவர் விளம்பரம் செய்து கொள்ளலாம் என்ற ஆட்சியர் கதிரவன்,

மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் அனுமதி இல்லை என்றார். ஈரோடு மாவட்டத்தில் 9,53,767 ஆண் வாக்காளர்களும்,10,00,332 பெண் வாக்காளர்களும் 104 மாற்றுபாலினத்தவர்கள் என மொத்த வாக்காளர்கள் 19,57,203 உள்ளனர். இந்த வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 741 வாக்குச்சாவடிகள் 926 மையங்களில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் மலைப்பகுதியில் 111 வாக்குச் சாவடிகளும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் 3 வாக்குச்சாவடிகளில் என 114 வாக்குச்சாவடிகள் மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 18 இடங்களில் இணையதள வசதி இல்லாத வாக்குச்சாவடிகள் உள்ளன அவற்றை வீடியோ கேமராக்களை ஒளிப்பதிவு செய்யப்படும் என்றும் ,

ஏற்கனவே இருந்த வாக்குப்பதிவு மையத்தை விட தற்போது 526 வாக்குசாவடி கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளதாக வாக்குப்பதிவு பணியில் 13,157 அலுவலர்கள் ஈடுபடுகின்றனர் . 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதுவரை 50 ஆயிரத்து 62 பேர் பதிவு செய்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 14350 பேர் இவர்களுக்கு தபால் வாக்குகள் வழங்கப்படும் இராணுவத்தினர் 298 பேரும் உள்ளனர் மாவட்டத்தில் கோபி மற்றும் சித்தோடு ஐஆர்டிடி கல்லூரி என 2 வாக்கு என்னும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றார். கொரோனா காலம் என்பதால் தேர்தல் அலுவலர்களுடன் சுகாதார துறையினரும் இணைந்து செயல்படுவார் என்றும் வாக்குப்பதிவின் போது வாக்காளர் ஒவ்வொருக்கும் ஒரு கையுறை வழங்கப்படும் என ஆட்சியர் கதிரவன் தெரிவித்தார்.

Views: - 2

0

0