கைவிட படுகிறதா கமல்ஹாசன் – லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’?

8 February 2021, 4:01 pm
Quick Share

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதியுடன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் “மாஸ்டர்”.

இந்த நிலையில் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்கிற படத்தை அடுத்து இயக்க இருக்கும் லோகேஷ் கனகராஜ், கமலின் தீவிர ரசிகர். ஆக, ஒரு வேட்டையாடு விளையாடு படம் போல் ஒரு சம்பவத்தை எதிர்நோக்கி காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு சின்ன அதிர்ச்சி.

சில நாட்களுக்கு முன் முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து, காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட கமல்ஹாசன் தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். அதன் பின் அவர் மீண்டும் தேர்தல் பிரசாரத்துக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில், விக்ரம் படத்தின் படப்பிடிப்பு இப்போதைக்கு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் கடுப்பான லோகேஷ், விக்ரம் படத்தை தற்போதைக்கு கிடப்பில் போட்டு அதற்கு முன், மாஸ்டர் படத்தில் பட்டையை கிளப்பிய விஜய் சேதுபதி அவர்களை ஹீரோவாக வைத்து சின்ன பட்ஜெட்டில் படம் இயக்கபோவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்கு மேலும் கமல் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் விக்ரம் படம் கைவிடப்படும் என்பது அரசல்புரசலாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

Views: - 0

0

0