விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் கொலை வழக்கு: சிறுவன் உட்பட 6 பேர் கைது

Author: Udayaraman
8 October 2020, 5:47 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மாநில விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் கொலை வழக்கில் சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி மாநில விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவராக இருந்தவர் மணிகண்டன். இவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி அளவில் 4 பேர் கொண்ட கும்பல் நெல்லித்தோப்பு பகுதியில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியது. இதில் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில்,

மணிகண்டனின் மைத்துனர் ராஜசேகர் மன்றத் தலைவர் பதவிக்கு ஆசை பட்டதாகவும், ஆனால் மணிகண்டன் அதை விட்டுத் தராத காரணத்தால் அவரை கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும் தலைமறைவாக இருந்த ராஜசேகர் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் கடந்த 3 நாட்களாக தேடி வந்தனர். இந்நிலையில் கொலைக் குற்றவாளிகள் தவளக்குப்பம் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு விரைந்த தனிபடை போலீசார் அங்கு பதுங்கி இருந்த ராஜசேகர் மற்றும் அவரது கூட்டாளிகளான சுனில், ஜான்சன், மாறன், சந்தோஷ் மற்றும் ஒரு சிறுவன் உட்பட ஆறு பேரை கைது செய்து அவர்களிடமிருந்த கொலைக்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்கள், கத்திகள் மற்றும் செல்போன்களை கைப்பற்றினர். மேலும் விசாரணையில் அவர்கள் தலைவர் பதவி போட்டியின் காரணமாகவே மணிகண்டனை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து ராஜசேகர் உட்பட 5 பேரை உருளையன்பேட்டை போலீசார் புதுச்சேரி காலாபட்டில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.

Views: - 30

0

0