விஜய சங்கல்ப யாத்திரை: கடும் போக்குவரத்து நெரிசல் – பொதுமக்கள் அவதி

6 March 2021, 3:12 pm
Quick Share

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் பங்கேற்கும் விஜய சங்கல்ப யாத்திரை நடைபெறுவது முன்னிட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினார்.

திருவண்ணாமலை பாஜக தெற்கு மாவட்டம் சார்பாக அண்ணா சிலை முன்பு விஜய சங்கல்ப யாத்திரை இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த யாத்திரையானது பாஜக மாநில வர்த்தக அணி துணை தலைவர் தணிகைவேல் தலைமையில் பாஜக மாநில தலைவர் வேல்முருகனை வரவேற்க நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் அண்ணா சிலை முன்பு அணிவகுத்து நின்றனர்.

இதன் காரணமாக திருவண்ணாமலையிலிருந்து கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர், பெங்களூரு, சேலம் தானிப்பாடி ஆகிய ஊர்களுக்குச் செல்ல பேருந்துகள் அணிவகுத்து நின்றது. பின்னர் பேருந்துகள் அனைத்தும் மாற்றுப்பாதையில் செல்ல திருப்பி விடப்பட்டது. சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேலாக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் அண்ணா சிலை பகுதியில் சாலை நடுவே இருசக்கர வாகனங்களை நிறுத்தியுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

Views: - 24

0

0