ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராமமக்கள் மயானத்தில் கறுப்பு கொடியுடன் காத்திருக்கும் போராட்டம்.

7 September 2020, 7:18 pm
Quick Share

அரியலூர்; மயான சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வெற்றியூர் கிராமமக்கள் மயானத்தில் கறுப்பு கொடியுடன் காத்திருக்கும் போராட்டத்தல் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள வெற்றியூரில் மயான சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பொது மக்கள் கறுப்பு கொடியுடன் மயானத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தற்போது கிராமத்தில் சாக்கடை கால்வாய் ஒரு புறம் அமைத்து வருவதாகவும், அதனை ஆக்கிரமிப்பை அகற்றி இருபுறமும் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் பிள்ளை குளத்தில் உள்ள மயானத்திற்க்கு சொந்தமான ஒன்னரை ஏக்கர் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பவயிடத்திற்க்கு வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றார்.

Views: - 5

0

0