அரசு மண் குவாரியை மூடக்கோரி கருப்புக்கொடி ஏந்தி கிராம மக்கள் போராட்டம்

10 April 2021, 3:54 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே அரசு மண் குவாரியை மூடக்கோரி மண் அள்ளும் இயந்திரத்தை சிறைபிடித்து கருப்புக்கொடி ஏந்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் புண்ணபாக்கம் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 164 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியில் அரசு சவுடு மண் குவாரி புதியதாக செயல்படுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அங்கு மண் அள்ள வந்த பொக்லைன் இயந்திரத்தை சிறை பிடித்து கருப்புக்கொடி கைகளில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் பகுதியில் மண் குவாரி செயல்பட்டால் நிலத்தடி நீர் விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் மண் குவாரியை உடனடியாக மூட வேண்டும் எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொது மக்களின் போராட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த வெங்கல் போலீசார் அவர்களிடம் சமரசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் போராட்டம் காரணமாக அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். மண் குவாரியை மூடும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Views: - 17

0

0